மேடை கலைவாணர், மதுரையின் மாணிக்கம்.. நன்மாறன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Share

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் வசித்து வந்த நன்மாறன் (72) நேற்றிரவு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். 2001, 2006 சட்டமன்ற தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் நன் மதிப்பிற்குரியவர். மக்களிடம் நேர்மையான, எளிமையான அரசியல்வாதி என்ற பெயரையும், கட்சியினரிடையே கடின உழைப்பாளி, உண்மையான சமூக சிந்தனையாளர் என்ற பெயரையும், இலக்கியவாதிகளிடம் மேடைக் கலைவாணர் என்ற பெயரையும் பெற்றவர்.

இந்நிலையில் நன்மாறன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், எளிமைப் பண்பாலும் அயராத உழைப்பாலும் அனைத்துத் தரப்பினரின் நன்மதிப்பையும் பெற்றவர்; இலக்கிய நயத்தால் ‘மேடைக் கலைவாணர்’ எனப் பெயர்பெற்ற மதுரையின் மாணிக்கம்; என் இனிய நண்பர் திரு. நன்மாறன் அவர்களின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து தவிக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினராக இருந்த வாய்ப்பை, மதுரை மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஐ.டி.பார்க், டைடல் பார்க் வரை மதுரைக்கு கொண்டு வரவும் பயன்படுத்திக் கொண்டவர் நன்மாறன். மதுரையில் உயர் நீதிமன்ற கிளை உருவாக தன் பங்களிப்பை செலுத்தி இருக்கிறார். இன்றும் வாடகை வீட்டில் குடியிருக்கும் கரை படியாத கைகளுக்கு சொந்தக்காரர். சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் இவருடைய அலுவலகம் சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாள்களிலும் திறந்தே இருக்கும்.

மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் மீது கொண்ட பற்றால் அவர்களின் வரலாறுகளை புத்தகமாக எழுதி இருக்கிறார். தமுஎகசவில் மதுரைக் கிளை உறுப்பினராகவும், மாநிலக் குழு, மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் பங்காற்றி, மாநில துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com