தற்காலிக பார்வையிழப்பு… அறிகுறிகளும் தீர்வுகளும் |கண்கள் பத்திரம் -27 | Temporary vision loss – Symptoms and Remedies

Share

அடுத்து மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியின் காரணமாகவும் சிலருக்கு இப்படி தற்காலிக பார்வையிழப்பு ஏற்படலாம். தவிர ஆப்தல்மோப்ளெஜிக் மைக்ரேன் (Ophthalmoplegic migraine) எனும் பிரச்னையாலும் தற்காலிக பார்வையிழப்பு ஏற்படலாம். இந்த வகை மைக்ரேனில் தலைவலிதான் வரும் என்றில்லை. கண்களில் ஃபிளாஷ் அடிப்பது, பார்வையில் தடுமாற்றம் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.

டாக்டர் வசுமதி வேதாந்தம்

டாக்டர் வசுமதி வேதாந்தம்

தீர்வுகள்…?

வாழ்வியல்முறையில் மாற்றங்கள் அவசியம். காபி, டீ அளவை குறைக்க வேண்டும்.

ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கைக்குப் பழக வேண்டும்.

ஆழ்ந்த உறக்கம் மிக அவசியம்.

தற்காலிக பார்வையிழப்புக்கான லேசான அறிகுறியை உணர்ந்தாலே ஓய்வெடுக்க வேண்டும்.

மைக்ரேன் பாதிப்புள்ளவர்களுக்கு அதற்கான அருமையான மருந்துகள் இன்று வந்துவிட்டன. மருத்துவ ஆலோசனையோடு அவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

வருடம் ஒருமுறையாவது முழுஉடல் பரிசோதனை செய்துபார்ப்பது அவசியம்.

– பார்ப்போம்

– ராஜலட்சுமி

பார்வை தொடர்பான உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள். பதில் சொல்லக் காத்திருக்கிறார் டாக்டர் வசுமதி வேதாந்தம்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com