foods that work better than pills in preventing hair loss

Share

நாம் பின்பற்றும் உணவு முறைகள் பல வழிகளில் நமது தோற்றத்தை நேரடியாக பாதிப்பது உங்களுக்கு தெரியுமா? பாதிக்கப்படுவதில் முடி ஆரோக்கியமும் ஒன்று. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக முடி ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

அதுவே சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்து கொள்ளும் போது முடியின் ஆரோக்கியம் பாதுகாக்கப்ப்டுகிறது. வயது ஏற ஏற பலரும் சந்திக்கும் கூந்தல் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று முடி உதிர்வு. பலருக்கு அதிக முடி உதிர்வு இருக்கும் நேரத்தில், சிலருக்கு நடுத்தர வயதிலேயே வழுக்கை விழுகிறது. ஒருவர் முடி உதிர்வவை சந்திக்கும் போது தலைமுடிக்கு உடனடி கவனம் தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சிலர் முடி உதிர்வை குறைக்க ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய சப்ளிமென்ட்ஸ் எடுக்கிறார்கள். இருப்பினும் சப்ளிமென்ட்ஸ் அல்லது மாத்திரைகளை விட சரியான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் போதும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த.

முடி உதிர்வு ஏன்?

முடி உதிர்வுக்கு பின்னால் உள்ள சில பொதுவான காரணங்களில் முக்கியமான ஓன்று ஊட்டச்சத்து குறைபாடு. மன அழுத்தம், பிசியான வாழ்க்கை முறை உள்ளிட்டவை காரணமாக உணவுகளில் முறையாக கவனம் செலுத்த முடியாததால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

முடி உதிர்வை குறைப்பதற்கான டயட் :

பல முக்கிய ஆய்வுகளின்படி முடி உதிவுக்கு காரணம் வைட்டமின்கள் பி12 & டி, பயோட்டின், ரிபோஃப்ளேவின் மற்றும் இரும்புச் சத்து போன்ற சில அடிப்படை ஊட்டச்சத்து குறைபாடுகள் ஆகும். எனவே மேற்காணும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒரு சீரான டயட்டை ஒருவர் பின்பற்ற வேண்டும். குறிப்பாக மோசமான ஊட்டச்சத்து காரணமாக அதிக முடி உதிர்வை சந்தித்தால், அதற்கு காரணமான ஊட்டச்சத்து குறைபாடுகளில் சிலவற்றைப் பூர்த்தி செய்ய உதவும் சில உணவுகள் கீழே…

முட்டை:

புரோட்டின் நிறைந்த உணவுகளில் முட்டை மிகவும் முக்கியமானது. எனவே இது கூந்தல் வளர்ச்சியில் மட்டுமல்ல, நம் தோல், நகங்கள், தசைகள் மற்றும் உங்கள் உடலில் உள்ள மற்ற திசுக்களின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பி வைட்டமின்களில் ஒன்றான பயோட்டின் முட்டையில் அதிகம் நிறைந்துள்ளது.

ஃபேட்டி ஃபிஷ் (ஒமேகா 3 மீன் வகைகள்):

சால்மன், டுனா, மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பயோட்டின் போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை முடி ஆரோக்கியம் மற்றும் முடி வளர்ச்சிக்கு சிறப்பாக உதவுகின்றன.

இரும்பு சத்து நிறைந்த உணவுகள்:

முடி உதிர்வை தடுக்க இரும்பு சத்து அதிகம் காணப்படும் கீரைகள், பச்சை இலை காய்கறிகள், பூசணி விதைகள், பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். கடல் உணவான ஆளி மற்றும் சோயாபீன்ஸ் உள்ளிட்டவையும் இரும்புச்சத்து நிறைந்த ஆதாரங்கள் என்பதால் முடி ஆரோக்கியத்தை வலுப்படுத்த இவற்றை டயட்டில் சேர்க்கலாம்.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் நபரா..? அதனால் வரும் பிரச்சனைகளையும் தெரிஞ்சுக்கோங்க…

இனிப்பு உருளைக்கிழங்கு :

வைட்டமின் ஏ குறைபாடு முடி உதிர்வை ஏற்படுத்தும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. இனிப்பு உருளைக்கிழங்கு பீட்டா கரோட்டினின் சிறந்த மூலமாகும். உடல் இந்த கலவையை வைட்டமின் ஏ-வாக மாற்றுகிறது. தலைமுடியை பளபளப்பாக வைத்திருக்க, முடி உதிர்வை தடுக்க இனிப்பு உருளைக்கிழங்கை டயட்டில் சேர்க்கலாம்.

கிவி :

வைட்டமின் சி-ன் சிறந்த ஆதாரமான கிவி நம் உடல் இரும்பை மிகவும் திறமையாக உறிஞ்ச உதவுகிறது. எனவே கிவி பழம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடி உதிர்வதைத் தடுக்கிறது.

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com