75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 50 லட்சம் வீடுகளில் தேசிய கொடியேற்றும் இயக்கம்: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டி

Share

சென்னை: தமிழகத்தில் 50 லட்சம் வீடுகளில் தேசிய கொடியேற்றும் இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்.

இது குறித்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் இன்று காலை அளித்த பேட்டி:
75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி மத்திய அரசு அலுவலகம், தபால் நிலையங்களில் நமது தேசிய கொடி கிடைக்கும் என்று அறிவித்துள்ளார். அதன்படி ரூ.25, ரூ.40 என்ற விலையில் தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனைக்கு வந்துள்ளது.

மத்திய அரசு அலுவலகத்திலேயும் விற்பனைக்கு வந்துள்ளது. மக்கள் அதை எல்லாம் வாங்கி கொண்டு தங்களுடைய இல்லத்தில்  வருகிற 13, 14, 15ம் தேதிகளில் ஏற்ற வேண்டும். 75வது ஆண்டு மறுபடியும் வர போவது கிடையாது. முக்கியமான சரித்திர மைல் கல் அது. அதற்காக பாஜ தமிழகத்தில் 50 லட்சம் இல்லங்களில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று ஒரு கொள்கை அடிப்படையில் ஒரு குழுவை அமைத்துள்ளது. தமிழகத்தில் வானதி சீனிவாசன், கருநாகராஜன் ஆகியோர் இதை பொறுப்பேற்று, தமிழகத்தில் இதை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் 50 லட்சம் இல்லங்களிலே தேசிய கொடி செல்ல வேண்டும். கட்சியை சார்ந்தவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கட்சியை சாராதவர்கள், பொதுமக்களும் தேசிய கொடியை ஏற்றுவதன் மூலமாக பிரதமரின் வேண்டுகோளை செயல்படுத்த வேண்டும். பாஜ மாவட்ட அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள பாஜ தலைமை அலுவலத்தில் கூட தேசிய கொடியை விற்பனை செய்வார்கள். ஒரு கொடியின் விலை ரூ.25, ரூ.40, ரூ.45 என்று இருக்கும். எங்களுடைய  ஒரே நோக்கம்  50 லட்சம் இல்லங்களில் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்பது மட்டும் தான். சமூக வலைத்தளங்களில் புரோபைல் பிக்சரில் தேசிய கொடியை வைக்க வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக மக்களும் சமூக வலைத்தளங்களில் தேசியக்கொடியை மாற்றி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com