கலைஞர் நினைவு நாளான ஆகஸ்ட் 7ம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறும் என அறிவிப்பு

Share

சென்னை: கலைஞர் நினைவு நாளான ஆகஸ்ட் 7ம் தேதி சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; தகைமைசால் தலைவராக – எழுத்தாளராக – கவிஞராக -சொற்பொழிவாளராக – திரைக்கதை வசனகர்த்தாவாக – இலக்கியவாதியாக – திரைப் படத் தயாரிப்பாளராக – தலைசிறந்த நிர்வாகியாக – தமிழகத்தின் ஐந்து முறை முதலமைச்சராக – உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவரும், திராவிட இயக்கத்தின் போர்வாட்களில் ஒருவராகத் தமது பொதுவாடிநவைத் தொடங்கி, பின்னர், காஞ்சி தந்த காவியத் தலைவர் அறிஞர் அண்ணா அவர்களோடு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றி, அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து,

அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாகத் திகடிநந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சி ல பக்கங்களை ஒதுக்கிக் கொண்ட முத்தமிழறிஞர் தமிழினத் தலைவர்கலைஞர் அவ ர்களின் 4 வது நினைவு நாளையொட்டி முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மற்றும் கழகப் பொதுச்தீ சயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கழக முன்னணியினர் கலந்து கொள்ளும் அமைதிப் பேரணி, ஆகஸ்ட் – 7 , ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு சென்னை, அண்ணா சாலை, ஓமந்தூரர் வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டு காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி அலுத்துவர்.

சட்டமன்ற மாநில அமைச்சர், மாவட்ட கழக செயலாளர்கள், முன்னா; -இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக செயலாளர்கள், தலைமைக்கழக செயற்குழு- பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக, பகுதி கழக, வட்டக்கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, மகளிர் தொண்டர் அணி, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, சிறுபான்மையினர் னால உரிமை பிரிவு, வர்த்தகர் அணி, தகவல் தொழிநுட்ப அணி, சுற்றுசூழல் அணி, அயலக அணி ஆகிய அனைத்து அணியினரும் கலைஞர் அவர்களின் நினைவை போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர் என சென்னை கிழக்கு -சென்னை – வடக்கு – சென்னை வடகிழக்கு – சென்னை மேற்கு, சென்னை தென் மேற்கு – சென்னை தெற்கு ஆகிய மாவட்ட கழகங்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com