உங்கள் டயட்டில் கிவி பழத்தை ஏன் சேர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் இங்கே! – News18 Tamil

Share

ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சுவைகள் பல நிறைந்த ஒரு சிறிய பழம் கிவி. இந்த சிறிய பழத்தில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. நியூசிலாந்தில் மிக அதிகமாக பயிரிடப்படுகின்றன கிவி பழங்கள். ஆனால் கிவி உண்மையில் கிழக்கு சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது.

அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால் கிவி ஒரு ஆரோக்கிய பழம் என்ற பெயரை கொண்டுள்ளது, பழத்தில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க, காயங்களை குணப்படுத்த, குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க என பல நன்மைகளை அளிக்கின்றன. பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் கிவி பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பகிர்ந்து கொண்டார். துடிப்பான நிறம் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சுவை கொண்டு பலரால் விரும்பப்படும் சிறிய பழமான கிவி தரும் ஆரோக்கிய நன்மைகள் மிகவும் வலிமையானது என்று அவர் கேப்ஷனில் குறிப்பிட்டு உள்ளார்.

அதே போல பிரபல ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ரச்சனா அகர்வால் கிவி பற்றி கூறுகையில் மிகவும் சத்தான பழங்களில் ஒன்று கிவி. இதை தவறாமல் சாப்பிடுவதால் சரும ஆரோக்கியம் மேம்படும், உடலில் தேங்கி இருக்கும் கொழுப்பு குறையும், பார்வை திறன் அதிகரிக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் என்கிறார். வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளது இப்பழம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக கூறியுள்ளார். கிவி பழத்தில் நிறைந்துள்ள பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் உள்ளிட்டவை ஹீமோகுளோபின் அளவை பராமரிப்பதோடு, ரத்த அழுத்தத்தையும் சீராக்க உதவுகிறது.

ALSO READ | நீரிழிவு நோயாளிகள் நாவல்பழம் சாப்பிடலாமா..? கூடாதா..? தெரிந்துகொள்ளுங்கள்…

தவிர ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் கே நிறைந்துள்ளதால் ரத்தம் உறைதல் மற்றும் கால்சியம் உறிஞ்சுதலை ஒழுங்குபடுத்த இப்பழம் உதவுகிறது என மேலும் கூறினார். அதேபோல எப்போதும் ஃபிரெஷ்ஷான கிவி பழங்களை சாப்பிட வேண்டும் என்றும் அதை சூடாக்க கூடாது, அவ்வாறு செய்வது வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்களை இழக்க வழிவகுக்கும் என்று கூறினார். இப்போது கிவி பழம் பற்றி நிபுணர் லோவ்னீத் பத்ரா கூறியுள்ள நன்மைகளை பார்க்கலாம்.

 

 

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது :

கிவி பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது சிறந்த செரிமானத்தை உறுதி செய்கிறது. இதில் ஆக்டினிடின் உள்ளது, இது புரதத்தை உடைக்க உதவும் புரோட்டியோலிடிக் என்சைம் ஆகும். இது புரதங்களின் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதிலுள்ள அதிக நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கும்.

சிறந்த தூக்கத்திற்கு உதவும் :

உங்கள் டயட்டில் கிவியை சேர்ப்பதால் கிடைக்கும் மற்றொரு முக்கிய ஆரோக்கிய நன்மை சிறந்த தூக்கம். தூக்கம் பிரச்சனை உள்ளவர்களுக்கு கிவி பழ நுகர்வு நல்ல பலனை கொடுக்கின்றன. ஏனென்றால் கிவி பழம் செரோடோனின் (serotonin) மூலமாகும். இதுவே சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கிறது. எனவே கிவி சாப்பிடுவது தூங்க முடியாமல் தவிக்கும் பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

ALSO READ | மூளைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கொழுப்பு நிறைந்த உணவுகள்… நிபுணர்கள் எச்சரிக்கை

கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது :

கிவி பழம் ஃபோலேட்டின் (folate – வைட்டமின் பி 6) நல்ல மூலமாகும். இது கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இது கருவின் வளர்ச்சிக்கு உதவுகிறது. கருவில் வளரும் குழந்தைகளுக்கும் இது நல்லது.

எலும்பு ஆரோக்கியம் :

ஃபோலேட், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை கிவி பழத்தில் அடங்கியுள்ள முக்கிய சத்துக்கள். இவை அனைத்தும் எலும்பு ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன. கிவியில் வைட்டமின் கே அதிகம் உள்ளது. முக்கியமாக வைட்டமின் கே எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு விலை மதிப்பற்றதாக இருக்கிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com