Is Old Cooked Rice Healthier Than hot boiled Rice Expert Reveals

Share

எவ்வளவோ வெளிநாட்டு உணவுகள், பியூஷன் உணவுகள் என்று பலவித உணவுகள் ஒவ்வொரு நாளும் அறிமுகப்படுத்தப்பட்டு வந்தாலும், அரிசி சாதம் சாப்பிடுவதில் இருக்கும் மகிழ்ச்சியும் நிறைவும் வேறு எதிலும் இருக்காது என்பது பலரும் கூறுவதைக் கேட்டிருப்போம். வேற்றுநாட்டு உணவுகளை முயற்சி செய்து வந்தாலும் வீட்டுக்கு வந்து ஒரு பிடி சோறு சாப்பிட்டால் தான் திருப்தியாக இருக்கும் என்று நினைக்கும் பலர் இருக்கிறார்கள். அதே போல, இந்திய உணவு என்றால் அரிசி அடிப்படை உணவு. குறிப்பாக, தென்னிந்தியாவில் விதவிதமான அரிசிகளும், வெவ்வேறு விசேஷங்களில் விருந்துகளில் சமைக்கப்படுகிறது.

ஒரு சிலருக்கு சுடச்சுட சாதம் வடித்து, சூடாக சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். சிலருக்கு முதல் நாள் வடித்த சாதம் அல்லது காலையில் வடித்த சாதத்தில், ஐஸ் பிரியாணி என்று கூறப்படும் பழைய சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள். பண்டைய காலத்தில், முதல் நாள் வடித்த சாதத்தில் மோர் அல்லது தயிர் ஊற்றி அல்லது வெறுமனே வெங்காயம் மிளகாய் சேர்த்து சாப்பிட்டு வேலைக்கு செல்லும் பழக்கம் இருந்துள்ளது. பழைய சாதத்தில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு வலுசேர்க்கும் என்று கால காலமாக கூறப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் பழைய சாதத்தைவிட சுடச்சுட சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியமானதா என்பதை பற்றிய நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்று இங்கே பார்க்கலாம்.

ஒரு நாளுக்கு முன்பு சமைத்த பழைய சாதம், அப்போது சமைக்கப்பட்ட சூடான சாதத்தை விட பல விதங்களில் ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. சமைக்கப்பட்ட அரிசியில் இருக்கும் ஸ்டார்ச், குளிரவைக்கப்பட்டவுடன், அதன் தன்மை மாறிவிடுகிறது. அதாவது, உணவில் இருக்கும் ஸ்டார்ச் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, எளிதாக செரிமானம் ஆகக்கூடிய ஸ்டார்ச்சில் இருந்து ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் அதாவது குறைவான கிளைகேமிக் இன்டக்ஸ் கொண்ட, எளிதில் செரிமானம் ஆகாத ஸ்டார்ச் ஆக மாறுகிறது. இது அரிசியில் மட்டுமல்லாமல், அதிக ஸ்டார்ச் உணவுகள் எல்லாவற்றிலும், உருளைக்கிழங்கு உட்பட, டைஜஸ்டிவ் ஸ்டார்ச் என்பதிலிருந்து ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் ஆக மாறுகிறது.

ஸ்டார்ச் அதிகம் இருக்கும் அரிசி சாதம், உருளைகிழங்கு உள்ளிட்டவை எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகள் என்பதால் சர்க்கரை நோயாளிகள் இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகிறார்கள். ஆனால் இந்த ஸ்டார்ச் குளிரூட்டப்பட்ட பிறகு இந்த உணவுகள் ரெஸிஸ்டன்ட் ஸ்டார்ச்சாக மாறி செரிமானம் ஆவதற்கு தாமதமாகும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிக்காது. அதுமட்டுமல்லாமல் பழைய சாதத்தில் உடலுக்கு தேவையான பாக்டீரியா மற்றும் புரோபயாட்டிக் ஆகியவை உற்பத்தியாகும். இது செரிமான கோளாறுகளை சரிசெய்வதோடு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Also Read : எடையை குறைக்க உதவும் 7 சுவையான இந்திய உணவு வகைகள்…

இன்று சமைத்த சாதத்தை, நாளை சாப்பிடுவது என்பது பல வித நன்மைகளை அளிக்கும். முந்தைய நாள் உணவு என்றால், அப்படியே தண்ணீர் ஊற்றி சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை. ஃபிரைட் ரைஸ், காய்கறி சாதம் என்று நீங்கள் விரும்பும் உணவை பழைய சாதம் வைத்தே சமைக்கலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com