ராமநாதபுரம்: திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு; ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி! | police arrested a woman who killed her husband along with 2 men

Share

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே உள்ள சிங்கனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைக்கனி. இவர் வெளிநாட்டில் பரோட்டா மாஸ்டராக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவர் மனைவி சாந்தி தன்னுடைய 3 குழந்தைகளுடன் சிங்கனேந்தலில் வசித்து வந்தநிலையில், சாந்திக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரின் சகோதரர் முறை கொண்ட கலைமோகன், பார்த்திபன் ஆகியோருடன் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து பிச்சைக்கனி திடீரென சொந்த ஊருக்குத் திரும்பி வந்திருக்கிறார். அப்போது மனைவியின் திருமணம் மீறிய உறவை அறிந்து அவரைக் கண்டித்துள்ளார்.

அதன் காரணமாக ஆத்திரமடைந்த சாந்தி, திருமணம் மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவர் பிச்சைக்கனியை கலைமோகன், பார்த்திபன் ஆகியோருடன் சேர்ந்து கொலைசெய்ய திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, கடந்த மே மாதம் 25-ம் தேதி பிச்சைக்கனியை மது குடிக்கவைத்த சாந்தி, பின்னர் இருவருடன் சேர்ந்து அவரைக் கொலைசெய்து உடலைக் காட்டுப் பகுதியில் வீசியிருக்கிறார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com