தேவையான பொருட்கள்:
மாம்பழ விழுது – 1 கப்
ரவை – 1/2 கப்
மைதா – 1 கப்
சர்க்கரை – 1 கப்
பால் – 1 கப்
நெய் – 1/4 கப்
பாதாம் எசென்ஸ் – 1 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 1 1/2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – 1/2 தேக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை:
பாத்திரத்தில், மாம்பழ விழுது, நெய், பால், பாதாம் எசென்ஸ் சேர்த்து கலக்கவும். மற்றோரு பாத்திரத்தில், மைதா, ரவை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கவும். மாம்பழ கலவையை மைதா கலவையுடன் கலக்கவும். கேக் டின்’னை கிரீஸ் செய்யவும். கேக் கலவையை ஊற்றவும். oven’னை 180°C அளவில் 15 நிமிடம் சூடாக்கவும். கேக் டின்’னை 180°C அளவில் 45 நிமிடம் பேக் செய்யவும். மாம்பழ ரவை கேக் தயார்.