சென்னை: அதிமுக ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார். ஆர்ப்பாட்டம் நடைபெற்றரு வரும் பகுதியில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி; மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வால் மக்கள் துன்பத்தில் உள்ளனர்.
எங்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுங்கள் என பிரதான எதிர்க் கட்சியான எங்களிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அதிமுகவை சாதாரணமாக நினைக்க வேண்டாம்; தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. 15 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை தந்தவர் ஜெயலலிதா. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். நாட்டு மக்களுக்காக பாடுபடும் இயக்கம் அதிமுக. தனது உடல்நலனைப்பற்றி கூட கவலைப்படாமல் நாட்டு மக்களுக்குகாக உழைத்தவர் ஜெயலலிதா. அதிமுகவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என பேசினார்.
இதனிடையே ஈபிஎஸ் ஆர்ப்பாட்டத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெயில் காரணமாக மயக்கம் ஏற்பட்டதும் தண்ணீர் தெளித்து அவரை மேடையில் அமரவைக்கப்பட்டார். சிறிது நேரத்திற்கு பின் அவர் சகஜ நிலைக்கு திருப்பினார். இதையடுத்து, ஆர்ப்பாட்டம் நிறைவடைந்ததையடுத்து எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். இதனால் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.