மாணவிகள் மரணங்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு

Share

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மர்மமான முறையில் இறப்பதும், தற்கொலைக்கு முயல்வதும் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்துகிறது. மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மண்ணின் ஈரம் கூட இன்னும் காயாத நிலையில் திருவள்ளூரில் மற்றொரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. சேலத்தில் அரசு பள்ளி மாணவி 2வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவமும், செங்கல்பட்டில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி ஸ்ரீமதி மரணத்தில் உள்ள மர்மம் விலகுவதற்கு முன்பே மற்றொரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது தமிழக மக்களை மேலும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மாணவி சரளாவின் மரணம் குறித்து நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும். பள்ளி மாணவிகளின் மர்ம மரண வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டாலும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com