வலியில் தன் 13 பற்களை தானே பிடுங்கிய பெண்; பரிதாபமான காரணம்!

Share

`உலகிலேயே காதலின் வலி பெரிதென்பார், பல் வலி பற்றி அறியாதோர்’ என்று சிலர் அந்த வேதனை பற்றி நகைச்சுவையாகக் கூறுவதுண்டு. பல் வலி வந்தால் பத்தும் பறந்து போகும். சாப்பிட, தூங்க, சிரிக்க என எதுவும் செய்ய முடியாத தவிப்பு அது. அப்படி பல நாள்கள் வலியில் சிக்கிய பெண் ஒருவர், தன் வசிப்பிடம் அருகே சுகாதார சேவை மையம் இல்லாததால் தன்னுடைய 13 பற்களையும் தானே பிடுங்கிக் கொண்ட பரிதாபகரமான சம்பவம் நடந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த 42 வயதான டேனியல்லி வாட்ஸ் ( Danielle Watts) என்ற பெண்மணி ஈறு சம்பந்தமான நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக தேசிய சுகாதார சேவை மைய மருத்துவரை அவரால் அணுக முடியவில்லை. ஏனெனில் ஏழு வருடங்களுக்கு முன்பாகவே, அவர் வசிப்பிடத்துக்கு அருகே இருந்த தேசிய சுகாதார சேவை மையம் மூடப்பட்டுள்ளது. தன்னால் பணம் கொடுத்து வெளியே மருத்துவம் பார்க்க முடியாத நிலையில் வலியிலேயே தவித்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய 13 பற்களை தானே பிடுங்கி உள்ளார். மீதமுள்ள 14 பற்களில் 8 பற்கள் அகற்றப்பட்டாக வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் இவருக்கு செயற்கை பற்கள் பொருத்தப்பட வேண்டும்.

இது குறித்து டேனியல்லி வாட்ஸ் கூறுகையில், “வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வேன், வேலைக்குச் செல்வேன், என் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன். தெரிந்தவர்களாக இருந்தாலும் அவர்களிடம் பேசுவதை வெறுத்தேன். பற்களில் உள்ள இடைவெளியை மறைக்க சிரிப்பதையும் நிறுத்தினேன்” என்று வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

Danielle Watts

டேனியல்லி வாட்ஸின் சோகமான நிலைமை சமூக வலைதளத்தில் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியது. அதனை தொடர்ந்து அப்பகுதியின் உள்ளூர் கவுன்சிலர், அப்பெண்ணுக்கு தனியார் சிகிச்சை பெற பிரசாரத்தின் மூலம் நிதி திரட்டினார். பலரும் முன்வந்து பணம் கொடுத்த நிலையில் சுமார் 1200 அமெரிக்க டாலர்கள் திரட்டப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு தனியார் பல் மருத்துவரிடம் 4 பற்கள் அகற்றப்பட்டதோடு, ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் மற்ற 4 பற்கள் அகற்றப்படவுள்ளது.

அதனை தொடர்ந்து 14 நாள்கள் கழித்து செயற்கை பற்கள் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முகம் தெரியாத மனிதர்கள் தனக்கு உதவியதை கண்டு நன்றியுடன் நெகிழ்ந்து போயுள்ளார் டேனியல்லி வாட்ஸ்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com