குழந்தை தத்தெடுப்புக்காக விண்ணப்பிக்கப்பட்ட 28,663 இந்திய விண்ணப்பதாரர்கள் குழந்தையை தத்தெடுக்க காத்திருக்கின்றனர் எனப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீப காலங்களில் குழந்தை தத்தெடுப்பு என்பது மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதே சமயம் குழந்தையை நினைத்த மாத்திரத்தில் எல்லாம் தத்தெடுத்து விட முடியாது. தத்தெடுக்கப்படும் குழந்தைகளின் நலன் கருதி பல விதிமுறைகள் மத்திய, மாநில அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளன.
குழந்தையை தத்தெடுக்க அரசின் கீழ் இயங்கும் அமைப்பில் பதிவு செய்யும் தம்பதியருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாவது இருக்க வேண்டும், குழந்தைப்பேறின்மையை உறுதி செய்யும் ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும், தம்பதியினரின் வயது கூட்டுத்தொகையானது 90-க்குள் இருக்க வேண்டும் எனப் பல விதிகள் உள்ளன.