அமெரிக்கா டு இந்தியா: 26 மணி நேர பயணத்தில் தாயகம் வந்த இந்திய நோயாளி

Share

  • இம்ரான் குரேஷி
  • பிபிசி இந்தி, பெங்களூரு

கொரோனா விமான ஆம்புலன்ஸ்

பட மூலாதாரம், ICATT

படக்குறிப்பு,

ICATT ஏர் ஆம்புலன்ஸில் புதிதாகப் பிறந்த சிசு சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டது

அவசர அறுவை சிகிச்சை தேவைப்படும் ஒரு இந்திய பெண், இந்த வாரம் அமெரிக்காவில் இருந்து தாய்நாட்டுக்கு அவசரகால மருத்துவ விமானம் மூலம் அழைத்துச் வரப்பட்டுள்ளார்.

அந்த விமானத்தில் அந்த நோயாளியின் பயணம் 26 மணி நேரம் நீடித்தது. வழியில் மூன்று முறை எரிபொருள் நிரப்புவதற்காக அந்த விமானம் நிறுத்தப்பட்டது – செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இந்தியாவின் தென்னக நகரமான சென்னையை வந்தடையும் முன்பும் ஒருமுறை ஐஸ்லாந்திலும் இரண்டாம் முறை துருக்கியிலும் அந்த விமானம் நிறுத்தப்பட்டது.

அந்த பெண் இப்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

“இதய வால்வு பிரச்னையுடன் அமெரிக்காவில் உள்ள ஐசியுவில் அந்த பெண் சேர்க்கப்பட்டிருந்தார். ஜூலை 5ஆம் தேதி எங்கள் இருதயநோய் நிபுணர் டாக்டர் சாய் சதீஷை அந்த பெண்ணின் குடும்பத்தினர் தொடர்பு கொண்டனர். அதைத்தொடர்ந்து இதய வால்வை சரி செய்ய இங்கு வந்தனர்,” என்று மருத்துவமனை அதிகாரி பிபிசியிடம் கூறினார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com