make instant poriyal powder | வீட்டில் எந்த பொரியல் செய்தாலும் அதன் மேல் இந்த பொடியை தூவி செய்து பாருங்கள்… எதுவும் மிஞ்சாது..! – News18 Tamil

Share

எந்த பொரியல் செய்தாலும் அதை சுவை மிகுந்ததாக மாற்ற வேண்டுமெனில் இந்த பொடியை அரைத்துக்கொள்ளுங்கள். இதை சமைக்கும்போது காரத்திற்கு பதில் தூவி சமைத்தால் வீடே மணக்க பொரியல் மணக்கும்.

தேவையான பொருட்கள் :

தனியா – 4 tbsp

கடுகு – 1 tbsp

சீரகம் – 1 tbsp

கடலை ப்ருப்பு – 1 tbsp

உளுத்தம் பருப்பு – 1 tbsp

வேர்கடலை – 2 tbsp

எள்ளு – 1 tbsp

பூண்டு பல் – 10

புளி – எலுமிச்சை அளவு

மிளகாய் – 10

செய்முறை :

முதலில் கடாய் வைத்து எண்ணெய் எதுவும் ஊற்றாமல் தனியாவை 1 நிமிடத்திற்கு வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் கடுகு, கடலை பருப்பு என அனைத்தையும் சேர்த்து மணம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

இவை அனைத்தும் ஆறியதும் ஜாரில் மொத்தமாக சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

இறுதியாக இதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் ஒரு ஓட்டு ஓட்டி எடுங்கள்.

கறிவேப்பிலை தொக்கு… வாரத்துல ஒரு நாளைக்காவது செஞ்சு சாப்பிட்டா உடல் நலப்பிரச்சனைகளுக்கு நல்லது..!

அவ்வளவுதான் பொரியலுக்கான பொடி தயார்.

இதை டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டு தேவையான போது பொரியலில் தூவுங்கள்.

 

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com