திருவள்ளூர்: சைட்டிஷ் வாங்குவதில் தகராறு… மது போதையில் வெட்டிக் கொல்லப்பட்ட ரௌடி!

Share

திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை அருகில் உள்ள தொட்டிக்கலைப் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (30). இவர்மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று இவரின் நண்பர்கள் அழைத்துள்ளனர். நண்பர்களுடன் வெளியே சென்ற வேலு, செவ்வாய்பேட்டை அருகில் உள்ள சிறுகடல் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்குச் சென்று மது வாங்கியிருக்கிறார்கள். மது வாங்கிவிட்டு அருகில் உள்ள மரத்தடியில் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

வேலு

மது அருந்தும்போது, சைட்டிஷ் வாங்குவதில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது வேலுவின் நண்பர் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து வேலுவை சரமாரியாக வெட்டியுள்ளார். படுகாயமடைந்த வேலு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஆவடி காவல்துறையினர் வேலுவின் சடலத்தைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

கொலை

இந்த கொலை தொடர்பாக செவ்வாப்பேட்டை பகுதி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மது அருந்தும்போது சைட்டிஷ் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் கொலைசெய்தனரா அல்லது இரண்டு கொலை வழக்குகளில் முக்கிய குற்றவாளியான வேலு திட்டமிடப்பட்டு கொலைசெய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com