தேவையான பொருட்கள் :
இஞ்சி – 1/2 கப்
கடலை பருப்பு – 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
கறிவேப்பிலை – சிறிதளவு
புளி – சிறிதளவு
வெல்லம் – 1/2 tsp
எண்ணெய் – 2 tsp
உப்பு – தே.அ

செய்முறை :
முதலில் இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்று இஞ்சியை வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் அதிலேயே கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, புளி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
கறிவேப்பிலை தொக்கு… வாரத்துல ஒரு நாளைக்காவது செஞ்சு சாப்பிட்டா உடல் நலப்பிரச்சனைகளுக்கு நல்லது..!
அவை ஆறியதும் அனைத்தையும் ஒன்றாக ஜாரில் சேர்த்துக்கொள்ளுங்கள். அதோடு வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
இறுதியாக அதை வழித்து கிண்ணத்தில் சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் இஞ்சி சட்னி தயார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.