பெரம்பலூர்: சின்னசேலம் பள்ளியில் இறந்த மாணவியின் பெற்றோர் பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: மாணவியின் சாவு குறித்து சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இருந்தும் தமிழக அரசு முறைப்படி நீதி விசாரணை நடத்த வேண்டும். கலவரத்திற்கு சமூக விரோதிகள் காரணமா என கண்டறிந்து அவர்கள்மீது நடவடிக்கை வேண்டும் என்றார்.