உடலியல்ரீதியான காரணமும் இதற்கு இருக்கக்கூடும். அதாவது, கொக்கிப்புழு தொற்று இருப்பவர்களுக்கும் PICA பாதிக்கலாம். இவர்களுக்கு சருமம் நீல நிறத்தில், (குறிப்பாக வாயைச் சுற்றியுள்ள பகுதியில்) காணப்படும். உங்கள் விஷயத்தில் அது இல்லை என்று தெரிகிறது.
சிகிச்சைகள் உண்டா?
பாதிப்பப்பட்ட நபர் யார் என்பதைப் பொறுத்து சிகிச்சை வேறுபடும். உதாரணத்துக்கு… குழந்தையா, வளர்ச்சிக் குறைபாடுள்ளவரா, கர்ப்பிணியா, மனநல பாதிப்புள்ளவரா என்று பார்க்க வேண்டும். இவர்களுக்கு மனநல ரீதியாக, சூழல்ரீதியாக, குடும்ப உறுப்பினர்களின் அக்கறை உள்ளிட்ட பல வழிகளில் சிகிச்சை தேவைப்படும்.
முதல் வேலையாக சம்பந்தப்பட்ட நபர் மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவர் அவரைப் பரிசோதித்து, தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு, தாதுச்சத்துக் குறைபாடுகள் உள்ளனவா என்று உறுதிசெய்வார். அதற்கேற்ப சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார். உளவியல் அணுகுமுறையோடு, தெரபி, SSRIs (Selective Serotonin Reuptake Inhibitors) போன்ற மருந்துகளும் பரிந்துரைக்கப்படும்.
உளவியல் ஆலோசகரை அணுகி, இந்தப் பழக்கம் குறித்து தெளிவு பெறலாம். இந்தப் பழக்கத்துக்கான மூல காரணம் தெரிந்தால் உங்களால் அதிலிருந்து விடுபட முடியும். தியானம் செய்வது, யோகா செய்வது, இசை கேட்பது, கூடவே உளவியல் சிகிச்சை போன்றவையும் உங்களுக்கு உதவலாம்.