பிறந்தகுழந்தையின் கண்களில் மை தீட்டலாமா? | Doctor Vikatan : Is it ok to apply kajal on newborn’s eyes

Share

குழந்தைகளுக்குத் தலைக்குக் குளிப்பாட்டுவதாக இருந்தால் அவர்களின் கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தாத, குழந்தைகளுக்கான பிரத்யேகமான, தரமான ஷாம்பூவை உபயோகிக்கலாம். மற்றபடி சோப்பு, அரப்புத்தூள், சீயக்காய்த்தூள் போன்றவற்றை எல்லாம் பயன்படுத்தக்கூடாது.

சில குழந்தைகளின் சருமம் வறட்சியுடன் காணப்படும். அதற்கு எண்ணெய் தடவும் பழக்கம் பலரிடம் உண்டு. எண்ணெய்க்கு பதில் ‘எமோலியன்ட் லோஷன் ‘ (Emollient Lotion) உபயோகிக்கலாம்.

குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் கண்களிலும் புருவங்களிலும் மை தீட்டக் கூடாது.  பெரும்பான்மையான கண் மைகளில் காரீயம் கலந்திருக்கும். அதை உபயோகிப்பதால் குழந்தையின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தவிர கண் மை உபயோகிப்பதால் குழந்தையின் கண்களில் எரிச்சல், சிவந்து போவது, கண்ணீர் வருவது, ஒவ்வாமை மற்றும் நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். எனவே கண் மையைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com