திருநெல்வேலி டவுன் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 2,000 மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்று காலை சுமார் 11 மணியளவில் இடைவேளையின்போது மாணவர்கள் கழிப்பறைக்குச் சென்றுள்ளனர். அப்போது கழிப்பறையை ஒட்டியிருந்த சுற்றுச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அதில் சில மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். மற்ற மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.
இந்த சம்பவத்தில் மொத்தம் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயத்துடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியை ஞானசெல்வி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுமார் ஒன்றரை ஆண்டுக்கு பின்னர் பள்ளி திறக்கப்பட்ட நிலையில், பள்ளியின் அனைத்து பகுதிகளையும் தலைமை ஆசிரியர் ஆய்வு செய்திருக்க வேண்டும் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக தொடர் கனமழை காரணமாக, சுவர்கள் பலவீனம் அடைந்திருக்கும் என்றும், அதனை ஆய்வு செய்திருக்கும் பொறுப்பு தலைமை ஆசிரியருக்கு உண்டும் என்றும் புகார்கள் கூறப்படுகின்றன.
இதையும் படிங்க : நெல்லை : இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை மீட்க ஆசிரியர்கள் உதவி செய்யவில்லை – மாணவர்கள் குற்றச்சாட்டு
இதேபோன்று தரமற்ற பள்ளி கட்டிட சுவரை கட்டிய ஒப்பந்ததாரர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, அடுத்த 48 மணி நேரத்தில் நெல்லையில் உள்ள அனைத்து பள்ளிகளின் தரம் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : நெல்லை : பள்ளி விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
இதையும் படிங்க : 3 மாணவர்கள் உயிரிழந்த நெல்லை பள்ளி விபத்தில் நடந்தது என்ன? மாவட்ட ஆட்சியர் விளக்கம்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.