`சாதிக்க வறுமை தடையில்லை’: பீகார் மாணவனுக்கு 2.5 கோடி வழங்கும் அமெரிக்க கல்லூரி!|Bihar student gets 2.5 crore for college studies in America

Share

கல்வி என்பது அனைவருக்குமான அடிப்படை உரிமை. ஆனால், பொருளாதார சூழ்நிலையின் காரணமாக பலருக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகவே போய்விடுகிறது. கல்வியில் எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் எனத் தடைகளைத் தகர்த்து சாதித்து வருபவர்கள் பலர்.

பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும், தான் கண்ட கல்விக் கனவை நிறைவேற்றியுள்ளார், பீகார் மாநிலம், புல்வாரிசெரிப் மாவட்டத்தில் உள்ள கோன்புரா என்ற கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பிரேம்குமார். இவரின் திறமையைக் கண்ட அமெரிக்க கல்லூரி ஒன்று, இவரின் மேற்படிப்புக்காக 2.5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

பிரேம் குமார்

பிரேம் குமார்
twitter

பிரேம் குமாரின் தந்தை தினக்கூலி வேலை செய்பவர். பிரேம் குமார் தற்போது 12-ம் வகுப்பு முடித்துள்ளார். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும், விடாமுயற்சியோடு படித்து அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். அதோடு பட்டியலினத்தைச் சேர்ந்த மக்களின் முன்னேற்றத்துக்கான பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இதை அறிந்த அமெரிக்காவின் முன்னணி கல்லூரிகளில் ஒன்றான லாஃபயேட் கல்லூரி (Lafayette College), தங்கள் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பயில 2.5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இந்த நிதியுதவி அமெரிக்காவில் தங்குவது, டியூஷன் கட்டணம், ஹெல்த் இன்ஷூரன்ஸ், பயணச் செலவுகள் முதலியவற்றை உள்ளடக்கியது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com