கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் கொரோனா விதிகளை மீறி கூட்டத்தை கூட்டியதாக கெளரவ் மனைவியை முதலில் நொய்டா போலீஸார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து கெளரவையும் கைது செய்தனர். இச்சம்பவத்தால் மெட்ரோ ரயில் நிலையத்தில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சில மணி நேரத்தில் இருவரும் ஜாமீனில் வெளியில் வந்தனர். நேற்று நள்ளிரவில் கெளரவ் தனது குடும்ப புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பிறந்தநாள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். காரக்பூர் ஐஐடியில் சிவில் இன்ஜினீயரிங் முடித்துள்ள கெளரவ் 3 யூடியூப் சேனல் நடத்துகிறார். அதில் உடல் பிட்னஸ் செய்திகள், அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள், நேரடி ஒளிபரப்பு போன்ற காரியங்களை செய்து வரும் கெளரவ் தற்போது டெல்லியில் சட்டம் படித்து வருகிறார்.
Youtuber பிறந்த நாள் கொண்டாட்டம்: டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கானோர். |Delhi Metro Rail station gets crowded as thousands gather to celebrate YouTuber’s birthday
Share