இலங்கை நெருக்கடி: ஜனாதிபதி மாளிகைக்குள் முதலில் சென்ற மலையகத் தமிழர் – பிபிசி தமிழ் செய்தியாளரின் கள அனுபவம்

Share

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக

இலங்கை ஜனாதிபதி மாளிகைக்குள் நாலாபுறமும் நிறைந்து கிடக்கும் போராட்டக்காரர்கள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

இலங்கை ஜனாதிபதி மாளிகைக்குள் நாலாபுறமும் நிறைந்து கிடக்கும் போராட்டக்காரர்கள்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வசித்து வரும் மாளிகையின் வாழ்வை ஒரு சில நிமிடங்கள் அனுபவிக்க கிடைத்த வாய்ப்பை போராட்டக்காரர்கள் சனிக்கிழமை மாலை பயன்படுத்திக் கொண்டனர். அங்குள்ள கள நிலவரத்தை பிபிசி தமிழுக்காக செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் நேரில் பார்வையிட்டு வழங்கிய சிறப்புத் தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக போராட்டக்காரர்களால் நாட்டின் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்டு அதனுள்ளே போராட்டக்குழுவினர் நுழைந்துள்ளனர். அது மட்டுமின்றி பலத்த பாதுகாப்பு நிறைந்த அந்த மாளிகையின் கிட்டத்தட்ட எல்லா அறைகளிலும் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். ஜனாதிபதி மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போராட்டக்காரர்கள், இன்று காலை (ஜூலை 10) வரையிலும் அங்கேயே உள்ளனர்.

முதன் முறையாக அந்த மாளிகைக்குள் நுழைவு வாயில் மீது ஏறிக் குதித்துச் சென்றவர் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் என்பதை அறிய முடிந்தது. அவரைத் தொடர்ந்து உள்ளே சென்றவர்கள், அங்குள்ள பொருட்களை தொட்டுப் பார்த்தனர்.

ஆரம்பத்தில் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்குழுவினர் ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தத் தொடங்கினார்கள்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com