“பொன்னியின் செல்வன் படிச்ச எல்லாருக்கும் ஒரு கற்பனை இருக்கும். இது மணி சாருடைய கற்பனை!”- கார்த்தி | Karthi talks about Ponniyin Selvan movie in the teaser launch event

Share

படத்தில் வந்தியத்தேவனாக நடித்திருக்கும் நடிகர் கார்த்தி இவ்விழாவில் பேசியதாவது, “இந்தப் படத்தை பத்தி நான் என்ன சொல்றது… ஜெயமோகன் அழகா பேசிட்டாரு. பாரதி பாஸ்கர் ரொம்ப அழகாகப் பேசிட்டாங்க. இந்த மேடை எனக்கு முக்கியமான மேடை. மணி சாருடைய அசிஸ்டென்ட்டாக, மணி சார்கூட சுமோல பின்னாடி லக்கேஜோட போன பையன் நான்… இன்னைக்கு மணி சார் எனக்கு இந்த மேடையைக் கொடுத்திருக்கார். அதுக்கு அவருக்குப் பெரிய நன்றி சொல்லிக்கிறேன்.

நான் ஹிஸ்டரி வகுப்புக்கு பயந்து ஓடுற ஆளு. பாதி நேரம் தூங்கிடுவேன். அப்படி நாம முழிச்சுருக்கற கொஞ்ச நேரம் கூட, நம்மள யாரு ஆண்டாங்க, நம்ம எப்படி சூரையாடப்பட்டோம், நம்ம எப்படி அடிமையானோம் அப்படிங்கிற வரலாற்றைப் படிச்சிருப்போம். நம்ம இப்போ ‘தமிழன் தமிழன்’னு சொல்றோம். அப்படி என்னடா நீ தமிழன்னு கேட்டா நம்மகிட்ட பதில் இருக்காது. நம்ம மன்னர்கள் எப்படி இருந்தாங்க, நம்ம நாடு எப்படி இருந்தது, நம்ம அரசாட்சி எப்படி இருந்ததுன்னு கேட்டா நமக்குத் தெரியாது. ஆனா அதை நாம தெரிஞ்சிக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com