சென்னை: தமிழகத்தில் ஐசியூவில் இருக்கும் காங்கிரஸ் கட்சியால், ஒரு இடத்தில் கூட பெற்றி பெற முடியாது என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி: பாஜ ஆட்சியில் தென் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் தரப்படமாட்டாது என கூறப்பட்டது. இளையராஜா உள்ளிட்ட 4 பேர் ராஜ்யசபா எம்.பி.,க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை, தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
கோவையில், தனது பிறந்த நாள் விழாவின் போது, மாநில அரசு நல்ல வேலை செய்வதாக கூறினார். அனைத்தும் அவரின் தனிப்பட்ட கருத்தாக பார்க்கிறோம். மோடி பற்றி பேசியது தனிப்பட்ட கருத்து. அரசியல் கலக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஐசியூவில் கட்சியை வைத்துள்ள கே.எஸ்.அழகிரி, அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும். ஐசியுவில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஆக்சிஜனாக திமுக உள்ளது. அதனை நிறுத்திவிட்டால், ஒன்றில் கூட டெபாசிட் கிடைக்காது.
ஓட்டு இயந்திரத்தில் அவர்களின் சின்னத்தை அச்சிடுவது கூட வீணாகி விடும். அழகிரி அரசியல் பேசுவதை நிறுத்திவிட்டு, சிந்தி சிதறி கிடக்கும். கட்சியை ஒட்ட வைக்க ‘பெவிகுவிக்’ வாங்கி தர தயாராக உள்ளோம். உருண்டு வருவோம். நடந்து வருவோம். அதனை அழகிரி பார்ப்பார். அன்று காங்கிரஸ் கட்சிக்கு முடிவுரை எழுதப்படும்.