ரூ. 2,000-க்கு அதிகமான யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணமா? புதிய மசோதாவால் எழும் யூகங்கள்

Share

ரூ. 2,000-க்கு அதிகமான யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணமா? புதிய மசோதாவால் எழும் யூகங்கள்

பட மூலாதாரம், Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images

படக்குறிப்பு, பிரதமர் மோதியின் கூற்றுப்படி, இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனைகள் ஜூலை மாதத்தில் 23.66 பில்லியன் என்ற உச்ச அளவை எட்டியுள்ளன.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பணம் செலுத்துதல் மற்றும் பரிவர்த்தனை அமைப்புகள் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த மசோதா வியாழன் அன்று மக்களவையில் நிறைவேறியது.

செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளபடி, ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (UPI) மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் வணிகர் தள்ளுபடி விகிதம் (Merchant Discount Rate) எனப்படும் வணிகர் கட்டணத்தை விதிப்பதற்கான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

யுபிஐ பரிவர்த்தனைகளில் பணம் செலுத்தும் நிறுவனங்களுக்கு எந்தக் கட்டணமும் கிடைக்காத நிலையில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் விரிவாக்கத்தைத் தொடர்ந்து பராமரிப்பது கடினமாகி வருவதாக தொழில்துறை வல்லுநர்கள் நீண்ட காலமாகக் கூறி வருகின்றனர்.

இதற்கு முன்பு, ராய்ட்டர்ஸ் தனது செய்தியில் அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, “இதன் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு வணிகர் தள்ளுபடி விகிதம் (எம்.டி. ஆர்-Merchant Discount Rate) விதிக்க அனுமதிக்கப்படலாம். இந்தத் திருத்தம் எம்.டி. ஆர் வசூலிப்பதற்கான சட்ட அடிப்படையை உருவாக்குகிறது. எனினும், கட்டணம் எவ்வளவு இருக்கும் அல்லது எந்தெந்த பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்று தெரிவித்திருந்தது.

இந்தியாவில் கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு பொதுவாக சுமார் 1.5% எம்.டி. ஆர் வசூலிக்கப்படுகிறது. டெபிட் கார்டுகளுக்கு பொதுவாக 0.9% வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com