10-வது ஆண்டில் TNPL: புதிய சீசன், புதிய எதிர்பார்ப்புகளுடன் இன்று தொடக்கம்! | TNPL Turns 10: New Season Kicks Off Today With Fresh Hopes

Share

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) நடத்தும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) டி20 கிரிக்கெட் திருவிழாவின் 10-வது சீசன் இன்று (ஆகஸ்ட் 4) திண்டுக்கல்லில் கோலாகலமாகத் தொடங்குகிறது. தமிழ் திரை மற்றும் விளையாட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கும் இந்த சீசன், பத்தாவது ஆண்டைக் குறிப்பதால் கூடுதல் சிறப்புப் பெறுகிறது.

இன்றைய தொடக்கப் போட்டியில், நடப்பு சாம்பியன் “ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்’ அணியும், முன்னாள் சாம்பியன் ‘திண்டுக்கல் டிராகன்ஸ்’ அணியும் மோதுகின்றன. கடந்த ஆண்டு இறுதிப்போட்டியின் மறுபதிப்பாக அமைந்துள்ள இந்தப் போட்டி, திண்டுக்கல் சொந்த மண்ணில் நடப்பதால் கூடுதல் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 2025 இறுதிப்போட்டியில் திண்டுக்கல் அணியை 118 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன்முறையாகக் கோப்பையைக் கைப்பற்றிய திருப்பூர் தமிழன்ஸ், இந்த முறையும் தனது ஆதிக்கத்தைத் தொடரக் காத்துள்ளது. மறுபுறம், கடந்த ஆண்டு தோல்விக்கு சொந்த மைதானத்திலேயே பதிலடி கொடுக்க திண்டுக்கல் அணி தீவிர முனைப்புடன் களமிறங்குகிறது.

இந்த சீசனின் ஸ்பெஷல் என்னென்ன?

• DRS அறிமுகம்: கிரிக்கெட் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையான நடுவர் மறுஆய்வு முறை (DRS) இந்த ஆண்டு முதல் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

• அதிகபட்ச ஏலம்: கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில், 783 வீரர்களிலிருந்து 55 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அஷ்வந்த் வல்தாப்பாவை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ₹14.45 லட்சத்திற்கு வாங்கியது, இந்த ஆண்டின் உச்சபட்ச ஏலமாகும்.

• களத்தில் இல்லாத நட்சத்திரங்கள்: வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் பங்கேற்பதன் காரணமாக, நட்சத்திர வீரர்களான ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் இந்த சீசனில் விளையாடவில்லை.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com