நரேந்திர மோதியின் ‘மன்னிப்பு’ வீடியோ பற்றி விவாதம் ஏன்? மோதி என்ன பேசியிருந்தார்?

Share

பிரதமர் மோதி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, வெள்ளிக்கிழமை இரவு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்ட பிரதமர் மோதி குழந்தைகளை மன்னிப்பது பற்றி பேசியிருந்தார்.
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டத்தின்போது தன்னை அவதூறாகப் பேசிய குழந்தைகளை மன்னிப்பதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்த காணொளியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் காணொளியில் “சில குறும்புக்கார குழந்தைகள் என்னையும் எனது தாயையும் அவதூறாகப் பேசினார்கள். குழந்தைப் பருவம் என்பது தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பும்கூட. இவர்கள் தவறாக வழிநடத்தப்பட்ட குழந்தைகள், இவர்களுக்கு சரியான பாதையைக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன்.” என்று அவர் தெரிவித்தார்.

அதே காணொளியில், பெண்கள் அவதூறான மொழியைப் பயன்படுத்துவது ‘கலாசார அதிர்ச்சி’ என்று தெரிவித்த மோதி “நம்முடைய மகள்கள் எவ்வாறு அத்தகைய மொழியைப் பயன்படுத்தலாம்?” என்றும் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

மன்னிப்பு பற்றி பிரதமர் மோதி பேசியது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

மறுபுறம் பல காங்கிரஸ் தலைவர்கள், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், எதிர்க்கட்சி எம்.பிக்கள் மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த பலரும் மோதியின் மன்னிப்பு பற்றி கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com