கங்குலி மகள் சனாவுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது. ஆர்டி- பிசிஆர் டெஸ்ட் முன்னமேயே கொடுக்கப்பட புதனன்று கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வர அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
கங்குலியின் மகள் மட்டுமல்லாது, கங்குலியின் மாமா தெபாஷிஷ் கங்குலி, கசின் ஷுவ்ரோதீப் கங்குலி, மைத்துனி ஜாஸ்மின் கங்குலி ஆகியோருக்கும் கொரோனா பாசிட்டிவ்.
49 வயதான சவுவர் கங்குலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கடந்த வாரம் மருத்துவமனையில் நெருக்கமான கண்காணிப்பில் இருந்தார். இவருக்கு மோனோ குளோனல் ஆண்டிபாடி சிகிச்சை அளிக்கப்பட்டு தேறினார்.
கங்குலி கடந்த ஆண்டில் இருமுறை மாரடைப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டு ஸ்டண்ட் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை:
இந்தியாவில் செவ்வாயன்று 50 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா புதனன்று கடந்த 24 மணி நேரத்தில் 58,097 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.50 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா தினசரி பாதிப்பு விகிதம் 4.18% ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 534 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 4,82,551 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,14,004 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 2,135 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்றில் இருந்து 828 பேர் குணமடைந்த நிலையில் 1,307 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.