இன்கா மண்டையோடு: பண்டைய கால அறுவை சிகிச்சைக்கான ஆதாரமா? அல்லது மூடப்பழக்கமா?

Share

பண்டைய கால மூளை அறுவை சிகிச்சை அதிசயத்தை வெளிக்கொண்டு வந்த இன்கா மண்டையோடு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், டாலியா வென்ச்சுரா
    • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

கடந்த 1864ஆம் ஆண்டில், எஃப்ரைம் ஜார்ஜ் ஸ்குயர் என்ற அமெரிக்கர் முற்றிலும் எதிர்பாராத ஓர் அனுபவத்தை எதிர்கொண்டார்.

பல விஞ்ஞானிகளால் சாத்தியமற்றதெனக் கருதப்பட்ட ஒரு விஷயத்துக்கான, அதாவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்ட ‘பண்டைய நரம்பியல் அறுவை சிகிச்சை’ (அல்லது மூளை அறுவை சிகிச்சை) குறித்த தெளிவான, மறுக்க முடியாத ஆதாரத்தை அவர் கண்டறிந்தார்.

ஆச்சர்யம் தரும் விதமாக, இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்வதற்குக் காரணமாக அமைந்தது ‘பறவைகளின் எச்சம்’. இது குவானோ என்றும் அழைக்கப்படுகிறது.

அமெரிக்க உள்நாட்டுப் போர் 1861இல் தொடங்கியபோது, போர்க் காலத்தில் போதுமான உணவுப் பயிர்களை விளைவிக்கத் தேவையான உரத்தின் சீரான விநியோகத்தை உறுதி செய்வது அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனுக்கு மிக முக்கியமான ஒன்றாக இருந்தது.

அந்தக் காலத்தில், உலகின் மிகச் சிறந்த இயற்கை உரம் தென் அமெரிக்க கடற்கரைக்கு அப்பால் இருக்கும் தீவுகளில் இருந்து கிடைத்தது. அங்கு பல நூற்றாண்டுகளாகப் பெருமளவிலான குவானோ படிந்திருந்தது. இந்த மதிப்புமிக்க வளத்தைப் பெறுவதற்காக, அதிபர் ஆபிரகாம் லிங்கன், 1864இல் பெரு நாட்டுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com