எம்.எஸ். விஸ்வநாதன் – கண்ணதாசன், டி.கே. ராமமூர்த்தி கூட்டணியின் காலத்தால் அழியாத பாடல்கள் எவை?

Share

மெல்லிசை மன்னன் எம் எஸ் விஸ்வநாதன் நினைவுநாள்: அவருடன் பழகியவர்கள் அவர் குறித்து கூறுவது என்ன?

பட மூலாதாரம், Youtube/ DD

    • எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தனது 4வது வயதில் தந்தையை இழந்து, தியேட்டர்களில் நொறுக்குத்தீனி விற்று, பலரிடம் கஷ்டப்பட்டு இசை கற்று, சென்னை வந்து போராடி சினிமா கம்பெனிகளில் வேலை பார்த்து, இசைக்குழுவில் ஆர்மோனியக் கலைஞராக பணியாற்றி பின்னர் இசையமைப்பாளர் ஆனவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்து உள்ளார். இன்று அவரின் 11-வது நினைவு நாள். அவர் குறித்து அவருடன் பழகியவர்கள், திரையுலகப்பிரபலங்களுடன் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

காதல் மன்னன் திரைப்படத்தில் நடித்த எம்.எஸ்.வி அந்த படத்திற்காக ஒரு பாடலையும் பாடினார்.

பட மூலாதாரம், SonyMusicSouth

படக்குறிப்பு, காதல் மன்னன் திரைப்படத்தில் நடித்த எம்.எஸ்.வி அந்த படத்திற்காக ஒரு பாடலையும் பாடினார்.

‘சால்வையை இடுப்பில் கட்டுவார்’

எம்.எஸ்..விஸ்வநாதன் கடைசிகாலங்களில் அவருடன் அதிகம் இருந்தவர் நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குனர் ஆதவன். இவர் தனியார் டிவியில் எம்.எஸ்.வியை வைத்து என்றென்றும் எம்எஸ்வி என்ற நிகழ்ச்சியை நடத்தினார். தனது அனுபவத்தை, சொல்லாத விஷயத்தை அதில் சொன்னார் எம்.எஸ்.வி. நிறைய பாடல்களையும் பாடினார்.

”எம்.எஸ்.விஸ்வநாதனின் கடைசி 5 ஆண்டுகள் அவருடன் அதிகமாக பழகிய, அவருடன் இருந்தவர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு பெருமை. அவரின் கடைசி 5 ஆண்டு பிறந்தநாளில் நான் பங்கு பெற்றேன். அவரின் பிறந்தநாளுக்கு வருபவர்கள் எண்ணிக்கை குறைந்தது. அவரே குறைத்துக்கொண்டே வந்தார். இறப்பதற்கு முந்தைய பிறந்தநாளில் என்னை மட்டும் அழைத்து, வீட்டில் விருந்து கொடுத்தார். மிகச்சிறந்த அறிவாளி வாய்திறந்து பேசமாட்டார். தன்னை புகழ்ந்துகொள்ளமாட்டார்” என்கிறார் ஆதவன்.

”அவரின் சின்ன, சின்ன விஷயங்களை கூட நான் ரசித்து இருக்கிறேன். அவரை மதித்து நிகழ்ச்சிகளில், விழாக்களில் சால்வை அணிவிப்பார்கள். பெரும்பாலானவர்கள் அதை பக்கத்தில் உள்ளவர்களிடம் கொடுப்பார்கள் அல்லது கையில் வைத்துக்கொள்வார்கள். ஆனால், எம்எஸ்வி தன்னை மதித்தவர்களுக்கு மரியாதை கொடுப்பார். அந்த சால்வையை தனது இடுப்பில் கட்டிக்கொள்வார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com