பின்னர், குழந்தைகள் இருவரும் நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது மரிய மிக்கேல் மின்சார வயரை தனது இரண்டு குழந்தைகளின் கை, கால்களில் கட்டி, தனது உடலிலும் கட்டிக் கொண்டு, மின்சாரத்தைப் பாய்த்து துடிதுடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று பிற்பகல் 2.30 மணி வரை பூட்டப்பட்ட கதவு திறக்கப்படவில்லை. குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லவில்லை. இதனால், அக்கம் பக்கத்தினர் புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

போலீஸார் பூட்டப்பட்ட கதவை உடைத்து பார்த்தபோது வீட்டின் உள்ளே மரிய மிக்கேல் மற்றும் 2 குழந்தைகள் ஆகியோர் கட்டிலில் படுத்திருந்தனர். மூன்று பேரின் உடலிலும் மின்சார வயர்கள் உடலில் கட்டியபடி வாயிலிருந்து ரத்தம் மற்றும் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மின்சார வயர்களில் மின்சார இணைப்பும் இருந்துள்ளது.