திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு: 64 பேர் பாதிப்பு, இருவர் மரணம் – என்ன நடக்கிறது?

Share

திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு: '64 பேர் பாதிப்பு, இருவர் மரணம்' – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், HANDOUT

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்படும் தனியாருக்குச் சொந்தமான கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தில் இன்று காலையில் அங்கு சுமார் 60க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்தபோது அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது.

இந்த வாயுவை சுவாசித்த பலருக்கும் வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில், சிலரின் உடல்நிலை கவலையளிக்கும் வகையில் இருப்பதாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா, காஞ்சிபுரம் சரக டிஐஜி சேஷ சாயி, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com