கேரிமென்: உங்கள் ஷாப்பிங் பைகளை இனி இவர்கள் ‘சுமப்பார்கள்’ – டெல்லியில் புதிய சேவை எப்படி இயங்குகிறது?

Share

கேரிமென், ஷாப்பிங், வேலைக்கு ஆள், ஸ்டார்ட்அப் நிறுவனம், டெல்லி

பட மூலாதாரம், Chitral Khambhati/ BBC

படக்குறிப்பு, ஜதிந்தர் மற்றும் அனிதா சபர்வா ஆகியோர், லாஜ்பத் நகர் சந்தைக்குச் சென்றபோது தங்களுக்கு உதவ, ‘கேரிமென்’ நிறுவனத்தைச் சேர்ந்த ஆனந்த் குமாரை அமர்த்திக்கொண்டனர்

    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நீங்கள் ஷாப்பிங் செல்லும்போது கடை கடையாய் ஏறியிறங்கி பொருட்களை வாங்கும்போது, பைகளை யாராவது தூக்கி வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்? அல்லது நீங்கள் ஷாப்பிங் செய்யும்போது உங்கள் குழந்தையின் தள்ளுவண்டியை அவர்கள் தள்ளிக்கொண்டு வந்தால் எப்படியிருக்கும்?

டெல்லியில் உள்ள பரபரப்பான சந்தை ஒன்றில், புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சேவையை வழங்கி வருகிறது.

ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட ‘கேரிமென்’ நிறுவனம், லாஜ்பத் நகர் சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நான்கு மணி நேரம் வரை ஆண் மற்றும் பெண் உதவியாளர்களை வழங்குகிறது. இதற்கான கட்டணம் 30 நிமிடங்களுக்கு 79 ரூபாயில் தொடங்குகிறது. ஒரு மணி நேரத்திற்கு 149 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்தச் சேவை வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த கேரிமென் ஊழியர்கள் தங்கள் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளதாக வாடிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், அதே வேளையில் இதுவொரு புதிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது. இந்திய நடுத்தர வர்க்கத்தினர், தங்களுக்கு எல்லாமே கிடைக்க வேண்டும் என அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கிறார்களா? மற்றும் இந்த உதவியாளர்கள் சுரண்டல் வேலைகளில் இருக்கும் வெறும் ஆடம்பர “கூலிகள்” தானா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com