தபிண்டா சன்பால்: தேசி பிளிங் மூலம் பிரபலமான இந்திய கோடீஸ்வரரின் மனைவி – யார் இவர்?

Share

தபிண்டா சன்பால்

பட மூலாதாரம், Netflix

படக்குறிப்பு, தபிண்டா சன்பால்

“என் கணவர் சதீஷுடன் வாழத் தொடங்கியதிலிருந்து, தினமும் காலையில் அவரது பாதங்களை மசாஜ் செய்துவிடுகிறேன். அவர் இளவரசரைப் போல உறக்கத்திலிருந்து விழித்தெழுவார். இந்து மத நம்பிக்கைகளின்படி, ஒரு மனைவி தினமும் காலையில் கணவரின் பாதங்களைத் தொட்டு வணங்கினால், வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பார் என்று அவர் நம்புகிறார்,” என்று கூறுகிறார் தபிண்டா.

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘தேசி பிளிங்’ (Desi Bling) என்ற புதிய ரியாலிட்டி ஷோவின் தொடக்கத்திலேயே இந்த காட்சி இடம்பெறுகிறது.

இதில், துபாயில் வசிக்கும் இந்திய கோடீஸ்வர தொழிலதிபர் சதீஷ் சன்பால், தனது மனைவி தபிண்டாவிடம் காலை வேளையில் பாத மசாஜ் செய்து கொள்ளும் காட்சி பார்வையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.

துபாயில் வசிக்கும் வசதி படைத்த இந்தியர்களின் ஆடம்பர வாழ்க்கை, அவர்களின் உறவுகள், வணிகம், சமூக விருந்துகள், அரசியல் மற்றும் அதில் உள்ள சிக்கல்களைச் சித்தரிக்கும் ஒரு ரியாலிட்டி ஷோவே இந்த ‘தேசி பிளிங்’.

இதில் தொலைக்காட்சி நட்சத்திரங்களான தேஜஸ்வி பிரகாஷ், கரண் குந்த்ரா ஆகியோருடன், ஜபல்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சன்பால் மற்றும் அவரது மனைவி தபிண்டா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com