'சூர்யவன்ஷி ஒரு நாள் எங்களுக்காக கோப்பையை ஜெயிச்சு கொடுப்பான்!' – ரியான் பராக் நம்பிக்கை

Share

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 29) குவாலிபையர் 2 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த விறுவிறுப்பான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, சுப்மன் கில்லின் அதிரடி சதத்தால் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

RR vs GT
RR vs GT

இந்தத் தோல்விக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். 

தோல்வி குறித்து ரியான் பராக் பேசியவை:  

‘இந்த பிட்ச்சில் நாங்கள் எடுத்த ரன்கள் ஒரு நல்ல ஸ்கோர் தான், இதை வைத்து எங்களால் ஜெயித்திருக்க முடியும். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய பிட்ச் பிட்ச் இன்னும் எளிதாகிவிட்டது. முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சாளர்களுக்கு பிட்ச் ஓரளவுக்கு உதவியது. இந்த பிட்ச்சில் 230 அல்லது 240 ரன்கள் எடுத்திருந்தால் அது எதிரணிக்கு சவாலாக இருந்திருக்கும்.

குஜராத் அணியின் ஓப்பனர்களை நாங்கள் சீக்கிரமாக அவுட்டாக்க நினைத்தோம், ஆனால் அது நடக்காததால் எங்களுக்குப் போட்டி கடினமாகிவிட்டது.

இந்தத் தொடரைப் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், எங்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது. எங்கள் அணியில் பல இளம் வீரர்கள் இருந்ததால், நாங்கள் இந்த அளவுக்கு வருவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

சூர்யவன்ஷி
சூர்யவன்ஷி

ஆனால், பல இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி உள்ளனர். அவர்கள் இங்கிருந்து தங்களை இன்னும் வளர்த்துக் கொள்வார்கள்.

வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. சும்மா பேட்டைச் சுழற்றி ரன்கள் எடுக்கும் ஆட்டம் அவருடையது அல்ல. அவர் மிகவும் கணக்குப்போட்டு, நிதானமாகத் தனது ஷாட்டுகளைத் தேர்வு செய்து விளையாடுகிறார். அவர் தனது எதிர்காலத்திலும், ராஜஸ்தான் அணிக்காகவும் மிகச் சிறப்பாக விளையாடி, எங்களின் இரண்டாவது கோப்பையை வென்று தருவார் என்று நம்புகிறேன்,” எனக் கூறினார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com