அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவது இனி சாத்தியமா? – புதிய விதி அறிமுகம்

Share

அமெரிக்கா, கிரீன் கார்டு, எச்1பி விசா, இந்தியர்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நார்டின் சாத்

    • எழுதியவர், சரீன் ஹபேஷியன்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பெரும்பாலான கிரீன் கார்டு விண்ணப்பதாரர்கள் அமெரிக்காவிற்கு வெளியே வேறு நாடுகளில் உள்ள தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற புதிய கொள்கையை அமெரிக்கா அறிவித்துள்ளது.

அசாதாரணமான சூழ்நிலைகளைத் தவிர, தங்களின் குடியேற்றத் தகுதியை மாற்ற விரும்பும் நபர்கள் நாட்டின் எல்லைக்கு வெளியே உள்ள தூதரக நடைமுறைகள் மூலமாகவே அதைச் செய்ய வேண்டும் என்று அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு வெள்ளிக்கிழமையன்று தெரிவித்துள்ளது.

அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் சட்டவிரோத குடியேற்றத்தைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, விசா வைத்திருப்பவர்கள் மற்றும் வருகை தந்தவர்கள் அமெரிக்காவில் இருக்கும்போதே கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கலாம் என்ற நிலைமையை மாற்றுகிறது.

இருப்பினும், நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த பழைய முறையின்படி, நீண்ட காலம் எடுக்கும் இந்த விண்ணப்ப செயல்முறையின் போது குடும்பங்கள் ஒன்றாகத் தங்கியிருக்க முடிந்தது, ஆனால் தற்போதைய புதிய கொள்கையை விமர்சிப்பவர்கள் கூறுகின்றனர்.

“அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமையை வழங்கும் ‘கிரீன் கார்டு’ பெறும் நம்பிக்கையில் நாட்டை விட்டு வெளியேறும் சில குடியேற்றவாசிகள், மீண்டும் அமெரிக்கா திரும்புவதை இந்த புதிய முறை கடினமாக்கலாம் அல்லது சாத்தியமற்றதாக்கலாம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com