விசிக, ஐயூஎம்எல் சார்பில் தலா ஒரு அமைச்சர்: தவெகவின் முதல் நோக்கம் நிறைவேறியதா?

Share

தவெக, விசிக, ஐயூஎம்எல்

பட மூலாதாரம், Lokh Bhavan Tamil nadu

படக்குறிப்பு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஷாஜகான், விசிக சார்பில் வன்னி அரசு மற்றும் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இன்று (மே 22), விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னி அரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

வன்னி அரசு சமூக நீதித்துறை அமைச்சராகவும், ஷாஜகான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

நேற்று (மே 21) காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

‘அமைச்சரவையில் பங்கு பெறாமல், தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டில் தான் தாங்கள் இருப்பதாக’ இடதுசாரிகள் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள்- இவை மூன்றுமே திமுகவின் கூட்டணியில் பல ஆண்டுகளாக இருந்த கட்சிகள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com