தமிழ்நாட்டின் கஜானா காலியா? விஜய் கூறுவது போல் நிதிநிலை மோசமாக உள்ளதா?

Share

தமிழ்நாட்டின் கஜானா காலியா? விஜய் கூறுவது போல் நிதிநிலை மோசமாக உள்ளதா?

பட மூலாதாரம், DIPR

  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் ஜோசப் விஜய் மே 10ஆம் தேதியன்று பதவியேற்றார். அவர் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதும், விழா மேடையிலேயே இரு மாதங்களுக்கு 500 யூனிட்டுக்கும் குறைவாகப் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், போதைப் பொருள் தடுப்புக்கு மாவட்டந்தோறும் சிறப்புப் படை, பெண்கள் பாதுகாப்புக்கு ”சிங்கப்பெண் அதிரடிப் படை” என முதலமைச்சராகத் தனது முதல் மூன்று உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

அதைத் தொடர்ந்து முதலமைச்சராகத் தனது முதல் உரையை ஆற்றியபோது, தமிழ்நாட்டின் கடன் அளவு குறித்தும், நிதி நிலைமை குறித்தும் முந்தைய அரசை விமர்சித்து அவர் சில விஷயங்களை பேசினார்.

இது பெரும் அரசியல் விவாதமாக மாறியுள்ளது. இதற்கு எதிர்வினையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றிக் கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டிலேயே தெளிவாகக் கூறிவிட்டோம். உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீர்கள்” என்று விமர்சித்திருந்தார்.

அதேபோல, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் தனது அறிக்கையில், “தமிழ்நாட்டின் கடன் அளவு 10 லட்சம் கோடி ரூபாய் என்று வெறுமனே குறிப்பிடுவது தவறான புரிதலை ஏற்படுத்தும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

உண்மையில், முதலமைச்சர் விஜய் ‘கஜானா காலி’ என்று கூறுவது போன்ற நிலை ஏற்படுவது சாத்தியமா? முந்தைய திமுக அரசாங்கம் விட்டுச் சென்றுள்ள தமிழ்நாட்டின் நிதி நிலைமை என்ன? தவெக அரசாங்கத்தால் மாநிலத்தின் கடன் அளவைக் குறைக்கவும், மேலும் அதிகரிக்காமல் தடுக்கவும் முடியுமா?

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com