துவாரகை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை அழிவைச் சந்தித்ததா? புதிய தகவல்கள்

Share

பெட்-துவாரகை அகழாய்வு: 'மகாபாரத' கால பொருட்கள் கண்டுபிடிப்பா? புதிய தகவல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துவாரகையின் தொன்மை மற்றும் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளும் பொருட்டு, இந்திய தொல்லியல் துறையின் (ASI) நீருக்கடியே ஆய்வு செய்யும் தொல்லியல் பிரிவு, துவாரகை, அரபிக்கடல், பெட்-துவாரகை ஆகிய இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டது

வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

தொன்மையான வரலாறு மற்றும் பல புதிர்களுக்குப் பெயர் பெற்ற துவாரகை மீண்டும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வரலாற்றுடன் தொடர்புடைய பல மறைந்த ரகசியங்கள் இந்தப் பகுதியில் இன்றும் புதைந்து இருக்கக்கூடுமென பலர் நம்புகின்றனர். பல ஆண்டுகளாக, ஆய்வாளர்களும் தொல்லியல் அறிஞர்களும் பல்வேறு ஆய்வுகள் மற்றும் தேடல்களின் வாயிலாக இந்த ரகசியங்களை வெளிக்கொணர முயன்று வருகின்றனர்.

இந்நிலையில், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அத்தகைய ஒரு முயற்சியின் விளைவாக, துவாரகை, பெட் துவாரகை மற்றும் அரபிக் கடலின் சில பகுதிகளில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின்போது “முக்கியமான வரலாற்றுச் சான்றுகள்” கண்டறியப்பட்டு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சன்க்கிழமை மாலை, இந்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநரான அலோக் திரிபாதி, துவாரகையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அந்தச் சந்திப்பின்போது, இப்பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மற்றும் தொல்லியல் ஆய்வுகளின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ள “புதிர்கள்” மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த விவரங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்தது என்ன?

இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் அலோக் திரிபாதி, செய்தியாளர் சந்திப்பின்போது, துவாரகை எவ்வளவு பழமையானது, வரலாறு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்துகொள்வதற்காக, தொல்லியல் துறையின் நீருக்கடியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளும் பிரிவு, துவாரகை, அரபிக் கடல், பெட்-துவாரகை ஆகிய பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டதாகக் கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com