எம். ஆர். ராதாவின் 10 பிரபல படங்கள் எவை?

Share

எம். ஆர் ராதா

பட மூலாதாரம், APinternational/YOUTUBE

தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற நடிகர் என்று கொண்டாடப்படும் எம்.ஆர்.ராதாவின் 119வது பிறந்த நாள் இன்று.

சென்னையில் பிறந்த எம்.ஆர்.ராதா நடிப்பு ஆசையில் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். பல்வேறு நாடகக் குழுக்களில் நடித்து தனது நடிப்பு திறமையை, தனி பாணியை வளர்ந்து கொண்டார்.

ஒரு கால கட்டத்தில் சொந்தமாக நாடக கம்பெனி தொடங்கி “ரத்தக்கண்ணீர்”, “தூக்கு மேடை”, “லட்சுமிகாந்தன்”, “பம்பாய் மெயில்”, “விமலா”, “விதவையின் கண்ணீர்”, “நியூஸ் பேப்பர்”, “தசாவதாரம்”, “போர் வாள்” போன்ற நாடகங்களை நடத்தினார்.

இதில் மிகவும் புகழ் பெற்றது ரத்தக் கண்ணீர் நாடகம். அது 3,500 முறை மேடை ஏறி சாதனை படைத்தது.

பின்னர் இந்த நாடகம் சினிமாவாகவும் மாறி கொடிகட்டி பறந்தது. நாடகத்தில் நடித்து வந்தவர் பின்னர் சினிமாவிலும் தடம் பதித்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com