பிரிட்டனுக்கு சூயஸ் போல அமெரிக்காவுக்கு ஹோர்மூஸ் நெருக்கடி அமையுமா? வரலாற்றில் 3 முக்கிய தருணங்கள்

Share

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்முஸ் நீரிணை, பிரிட்டன், சூயஸ் நெருக்கடி

பட மூலாதாரம், BBC/Getty images

ஒரு மாதத்திற்கு முன்பு இரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் தூண்டப்பட்ட போர், கணிக்க முடியாத தன்மையிலிருந்து கணிக்க முடிவதாக மாறியுள்ளதாக தெரிகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சமூக ஊடகப் பதிவுகள், குறுகிய காலத்திற்காவது, குழப்பத்தை அதிகப்படுத்தி உலகளாவிய சந்தைகளை உலுக்குவதாகத் தோன்றுவதும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனால், இந்தப் போரின் போக்கைத் தீர்மானிப்பதில் டிரம்பின் கருத்துகள் மட்டுமே ஒரு காரணியாக இருக்கவில்லை – வரலாறும் ஒரு காரணியாகத் தெரிகிறது.

மோதல் தொடங்கிய வாரங்களில், வல்லுநர்கள் இந்தக் கொந்தளிப்பைப் புரிந்துகொள்ளவும், அது எந்தத் திசையில் செல்லக்கூடும் என்று கணிக்கவும் கடந்த கால நிகழ்வுகளை அதிகளவில் ஆதாரமாகக் கொண்டுள்ளனர். பல வரலாற்று நிகழ்வுகளில், மூன்று முக்கிய அத்தியாயங்கள் தனித்து நிற்கின்றன.

சூயஸ்

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்முஸ் நீரிணை, பிரிட்டன், சூயஸ் நெருக்கடி

பட மூலாதாரம், Hulton-Deutsch/Hulton-Deutsch Collection/Corbis via Getty Images

படக்குறிப்பு, ஆங்கிலோ-பிரெஞ்சுப் படைகளின் தாக்குதலை முறியடிப்பதற்காக, சூயஸ் கால்வாயை மறிப்பதன் செயல்திறனை எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் உணர்ந்திருந்தார்.

இரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து, முதல்முறையாக இரான் ஆதரவு பெற்ற ஏமன் ஹூதிகள் வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் இருந்து, இந்த மோதலில் ஒரு புதிய முனைப்பு உருவாகியுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com