ஓமன்: பாகிஸ்தான் இளைஞர் இரு இந்தியர்களின் உயிரை காப்பாற்றியது எப்படி?

Share

ஓமன், 2 இந்தியர்களை காப்பாற்றிய பாகிஸ்தானியர்

பட மூலாதாரம், SHAHZAD KHAN

படக்குறிப்பு, ஷாஜாத் கானின் தந்தை பாகிஸ்தானின் சார்சடா பகுதியில் உள்ள ஷப்காதரில் ஒரு மளிகைக் கடை நடத்தி வருகிறார்.

மார்ச் 21 அன்று, ஓமனின் தலைநகரான மஸ்கட்டில் பலத்த மழை பெய்தது. மஸ்கட்டில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விலாயா பர்கா அருகிலுள்ள ஒரு பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது.

திடீரென ஒரு கார் பாலத்தின் அடியில் மிதந்து சென்றதைக் காண முடிந்தது. கூட்டத்தில் நின்றிருந்தவர்கள் இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த போதே, கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர், எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல், காரில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்ற முடிவு செய்தார்.

இந்த இளைஞர் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சர்சடாவைச் சேர்ந்த ஷஸாத் கான் ஆவார். நீரோட்டம் வலுவாக இருந்தபோதிலும், கார் ஒரு பாலத்தின் தூணில் மோதி நின்றபோது, ஷஸாத் கான் வெளியே வந்து, கார் கதவின் லாக்கை உடைத்து, உள்ளே சிக்கியிருந்த இருவரை மீட்டார்.

ஷஸாத் கான் காணப்படும் இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பிஸ்மில்லா ஜானும் இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களில் ஒருவர். அவர் ஷஸாத் கானுடன் அங்கேயே இருந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com