அப்ரார் அகமது ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் வலுக்கும் எதிர்ப்புகளும் – ஒரு முழு அலசல்!| Sunrisers Sign Abrar Ahmed – Rising Backlash and Controversy Explained | Full Analysis

Share

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

ஐபிஎல், பிபிஎல், சிபிஎல் போன்று டி20 லீக் போட்டிகளுக்கு மாற்றாக நூறு பந்துகளைக் கொண்ட “தி ஹண்ட்ரட் லீக்’ போட்டிகள் பிரிட்டனில் நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் பர்மிங்காம் பீனிக்ஸ், லண்டன் ஸ்பிரிட், மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ லண்டன், சதர்ன் பிரேவ், சன்ரைசர்ஸ் லீட்ஸ், ட்ரெண்ட் ராக்கெட்ஸ் மற்றும் வெல்ஷ் ஃபயர் உள்ளிட்ட 8 அணிகள் இருக்கின்றன.

'தி ஹண்ட்ரட் லீக்'

‘தி ஹண்ட்ரட் லீக்’

தி ஹண்ட்ரட் லீக் ஏலம்

இதில், நான்கு அணிகளை இந்தியாவை மையமாகக் கொண்டுள்ள ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் பங்குகளை வைத்துள்ளனர்.

ஜூலை மாதம் இந்தத் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் வீரர்களுக்கான ஏலம் மார்ச் 12 ஆம் தேதி லண்டனின் பிகாட்லி லைட்ஸில் நடைபெற்றது.

சன்ரைசர்ஸ் அணிக்காக உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் டேனில் வெட்டோரி உள்ளிட்டோர் ஏலத்தில் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். இந்த அணிக்கு கேப்டனாக ஹாரி ப்ரூக் செயல்பட்டு வருகிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com