அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய் சேருவாரா? பவன் கல்யாணை முன்வைத்து எழுந்த யூகத்தின் பின்னணி

Share

அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக?, தமிழ்நாடு அரசியல், விஜய்

பட மூலாதாரம், TVK

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரப் போவதாக தமிழக அரசியல் அரங்கில் கடந்த சில நாட்களாக பேச்சுகள் வலம்வந்த நிலையில், தற்போது அந்தச் செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விஜய், தே.ஜ.கூட்டணியில் இணைய வேண்டும் என அறிக்கைவிடுத்த பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் தற்போது அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். என்ன நடந்தது?

பாஜக தலைவர்கள் கருத்தால் எழுந்த ஊகம்

கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பல ஊடகங்களில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமா என்பது குறித்த யூகங்கள் வலம் வர ஆரம்பித்தன.

சனிக்கிழமை பா.ஜ.கவைச் சேர்ந்த கே.எஸ். ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்தப் பதிவில், தமிழக வெற்றிக் கழகம் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணியில் இணைய வேண்டும் என ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியிருப்பதாக குறிப்பிட்டார்.

“விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் வருவாரா போவாரா என்பது குறித்து தெளிவான முடிவு எதையும் என் அளவில் சொல்வதற்கில்லை. ஆனால் பவன் கல்யாண் இதுகுறித்து பேசி உள்ளது உண்மைதான்.” என தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com