`‘உங்களுக்கெதிராக இன்னும் எவ்வளவுதான் ரன்கள் எடுக்க வேண்டும்?’ என்று கேட்டேன்!' – சூர்யகுமார் யாதவ்

Share

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஜேக்கப் பெத்தேலின் அதிரடியை கடந்து இந்திய அணி போராடி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.

Suryakumar
Suryakumar

போட்டிக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் பேசியவை, ‘இது ஒரு நம்ப முடியாத உணர்வு. இந்தியாவில் விளையாடி, இப்படிப் பெரிய அணியை வழிநடத்துவது, அதுவும் உலகக் கோப்பை இங்கே நடக்கும்போது அஹமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு செல்வது, இவை அனைத்தும் எங்களுக்கெல்லாம் பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது.

‘உங்களுக்கெதிராக இன்னும் எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்?’

சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய வந்தவுடன் அவர் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக தெரிந்திருந்தது. ஒரு விக்கெட் விழுந்தபோதும் கூட இந்த பிட்ச் நல்லதாக இருப்பதை அவர் புரிந்திருந்தார். அவர் பேட்டிங் செய்த விதம் அணிக்கு தேவையானதுதான்.

ஹாரி புருக்கிடம் நான் நகைச்சுவையாக, ‘உங்களுக்கெதிராக இன்னும் எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்?’ என்று கேட்டேன். ஆனால் உண்மையாகச் சொன்னால் அது நல்ல பிட்ச். அவர்கள் பேட்டிங் செய்த விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. அதற்கான கிரெடிட்டை அவர்களிடம் இருந்து எடுக்க விரும்பவில்லை. அவர்கள் முழுப் போட்டியிலும் ஆட்டத்தில் இருந்தார்கள், இலக்கை தொடர்ந்து விரட்டிக் கொண்டே இருந்தார்கள்.

Suryakumar
Suryakumar

ஆனால் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் மற்ற பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை மீண்டும் எங்களிடம் கொண்டு வந்த விதம் அசாதாரணமானது. பும்ரா என்ன செய்யக்கூடியவர் என்பதை நாங்கள் எல்லோரும் அறிவோம். பல ஆண்டுகளாக இந்தியாவுக்காக அவர் செய்த பங்களிப்பும் நமக்குத் தெரியும். இன்று மீண்டும் அதையே செய்து தனது பொறுப்புணர்வை காட்டி ஆட்டத்தை எங்களுக்குச் சாதகமாக மாற்றினார்’ என்றார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com