மக்கள் விரும்பிச் சாப்பிடும் தெருக்கடை உணவுகளில் பானி பூரி முக்கியமானது. வெளியே செல்லும் மக்கள், பானி பூரி கடையைக் கண்டால், பெரும்பாலும் சாப்பிடாமல் வருவதில்லை. விலையும் சுவையும் ஒருசேர ஈர்ப்பதால் மக்களின் விருப்பமான தெருக்கடை உணவுகளில் பானி பூரிக்கு தனி இடமுண்டு.
இந்நிலையில், நேபாளத்தில் பானி பூரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
காலராவை உண்டாக்கும் பாக்டீரியா கிருமிகள், பானிபூரியுடன் விற்கப்படும் தண்ணீரில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அங்கே பானி பூரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.