“நாங்கள் ஒரு அணியாக ஒன்றாகச் சேர்ந்து இந்த வெற்றியை கொண்டாடுவோம்”- கேப்டன் சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி| “We will come together as a team and celebrate this victory,” said captain Suryakumar Yadav emotionally.

Share

2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருக்கிறது.

இதன்மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. நேற்றையப் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “ இந்த வெற்றி முழுக்க முழுக்க இந்தியாவுக்கானது.

நாங்கள் விளையாட நினைத்த அதே விதமான கிரிக்கெட்டையே இந்தப் போட்டியிலும் விளையாடினோம். இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்வதே சிறந்த முடிவு என்று நினைத்தோம்.

ஆட்டம் தொடங்கியதும் 0/1 என்ற நிலையில், யாரோ ஒருவர் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அந்த நேரத்தில் இஷான் கிஷன் சற்று வித்தியாசமாக, ‘அவுட் ஆஃப் த பாக்ஸ்’ சிந்தனையுடன் விளையாடினார்.

அவர் அந்த பொறுப்பை எடுத்த விதம் உண்மையிலேயே அசாதாரணமானது. முதலில் பேட்டிங் செய்யும் போது ஆடுகளத்தை கணிப்பது சற்று கடினம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com