விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் “மார்கன்’. இப்படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய் தீஷன் நடித்திருந்தார்.
தற்போது விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்திருக்கும் படத்தில் ‘பூக்கி’ (Pookie) படத்தில் அஜய் தீஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தை சலீம் பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இயக்கியிருக்கிறார். ‘பூக்கி’ (Pookie) படம் இன்று ( பிப்.13) வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விஜய் ஆண்டனி, “படத்தின் பெயர் ‘பூக்கி’ என்று இருப்பதைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
அந்தக் காலத்தில் சாமி, நாதா, அத்தான் என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். இன்று அது ‘பூக்கி’-யாக மாறியிருக்கிறது.
பெரியவர்களும் இந்தப் படத்தை தாராளமாகப் பார்க்கலாம். ஜென்சி மாதிரியான படமாக இருந்தாலும் கலகலப்பாகவும், எமோஷனலாகவும் எல்லோருக்கும் புரிகின்ற, பிடிக்கின்ற மாதிரியான படமாக இருக்கும்.
எடிட் செய்த பிறகு இந்தப் படத்தை நிறைய முறை பார்த்தேன். ஒவ்வொரு முறை இந்தப் படத்தை நான் பார்த்தபோதும் அழுதிருக்கிறேன். எல்லோருக்கும் பிடித்த நல்ல படமாக நிச்சயம் இந்தப் படம் இருக்கும்” என்று பேசியிருக்கிறார்.